திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடியதாக விஸ்வா மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், திருடப்பட்ட தங்க நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.