பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று, 02-03-2026 அன்று தொடங்கி, 27-03-2026 வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 21,419 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 11,457 மாணவர்களும், 9,662 மாணவிகளும் அடங்குவர். மாவட்டம் முழுவதும் 88 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. திண்டுக்கல் புனிதவளனார் மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என அவர் கேட்டறிந்தார்.