தமிழக முதல்வர், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூட தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 26 கடைகள் மூடப்படுகின்றன. இதில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், நாகல்நகர், காட்டாஸ்பத்திரி, ஸ்டாலின் காட்டேஜ், AMP சாலை ஆகிய இடங்களில் தலா ஒரு கடை என 6 கடைகள் அடங்கும். மேலும், பழனியில் 8 கடைகள், ஒட்டன்சத்திரத்தில் 2, கொடைக்கானலில் 3, நிலக்கோட்டையில் 2, ரெட்டியார்சத்திரத்தில் 1 என மொத்தம் 24 கடைகள் மூடப்படுகின்றன. திண்டுக்கல் நகரில் இன்று மேலும் 2 கடைகள் மூடப்படும்.