திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த 24 சார்பு ஆய்வாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.