திண்டுக்கல் ரயில் நிலையத்தில், புருலியாவிலிருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 3.700 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.