திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடந்து சென்ற கூலித் தொழிலாளி மணியிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக YMR-பட்டியை சேர்ந்த
சஞ்சய், கௌதம், மதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மூவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.