திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பழனிரோடு, சக்தி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் ராஜேஷ்ரோஜர்(19), தேவஅலியார்விஜய்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.