திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 4.400 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.