தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

0பார்த்தது
திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்பாக, வேடபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (35), தினேஷ்குமார் (21) மற்றும் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட S. P. பிரதீப் உத்தரவின் பேரில், நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு எக்ஸெல் சூப்பர் மற்றும் இரண்டு ஹோண்டா இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி