திண்டுக்கல் நகரில் சக்திவேல், சௌந்தர்மணி, நிதிஷ்குமார், ரமேஷ், சுரேஷ் ஆகிய ஐந்து பேர் கத்தி, உருட்டுகட்டை, மிளகாய் பொடி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியபோது காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் நகர் டிஎஸ்பி. கார்த்திக் உத்தரவின் பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் பாறைப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.