போலீசாரை மிரட்டிய 6 பேர் அதிரடி கைது

4பார்த்தது
போலீசாரை மிரட்டிய 6 பேர் அதிரடி கைது
திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் குழந்தைபட்டி பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் வந்த சீலப்பாடி குழிப்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), காப்பிலியப்பட்டி பகவதி (30), பண்ணப்பட்டி கவியரசு (26), திண்டுக்கல் ஜெயக்குமார் (28), தர்மராஜ் (26), பெரியகோட்டை முத்துக்குமார் (31) ஆகியோரை சோதனையிட்டனர். காரில் இருந்த ஆயுதங்கள் குறித்து விசாரித்தபோது, அவர்கள் வாள், கத்தியை எடுத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி