திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி. சங்கர் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன், சார்பு ஆய்வாளர்கள் சித்திக், கலையரசன், பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு பைபாஸ், பழனி பைபாஸ், அஞ்சலி ரவுண்டானா, பூதிபுரம், பித்தளைபட்டி, செட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த ராஜ்குமார், ஜோசப்ராஜ், பெரியதுரை, அய்யப்பன், மருதைவீரன், சிவா, சுரேஷ்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.