திண்டுக்கல் நகர் DSP கார்த்திக் உத்தரவின் பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ரோடு கல்லறை மேடு அருகே கஞ்சா விற்பனை செய்த பிரவீன்லியாஸ் (22), தேவின்சூர்யாஜோசப் (19), கவின் (19), டேனியல் அஜய் (19), ஜஸ்டின்நிர்மல் (19), நோபில்அலெக்ஸ் (21) மற்றும் 18 வயது சிறுவன் என 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.