திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடி மேம்பாலம் அருகே லாரி மோதி கருப்பையா(15) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.