திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆர்த்தி தியேட்டரில் கடந்த 13ஆம் தேதி இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் வெளியான 'மை லார்ட்' திரைப்படம் குறித்து அறியவும், பொதுமக்களுடன் இணைந்து படம் காணவும் கதாநாயகன் சசிகுமார், கதாநாயகி சைத்ரா அச்சார், இயக்குனர் ராஜமுருகன் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு பொதுமக்களிடம் படம் குறித்த கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.