2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ், அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.