தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் காலமுறை ஊதியம், ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில், ஊழியர்கள் தட்டில் ஒலி எழுப்பி நூதன முறையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.