திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை செல்வதற்காக காத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரிடம் மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டு 8.5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய போலீசார், திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கோவையைச் சேர்ந்த விக்னேஷ் (19), திருவையாறு-ஐ சேர்ந்த தினேஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த சிவா (22) என்பவரையும் கைது செய்தனர்.