திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் சமூக பணியில் ஈடுபட்டவர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் 19.06.2026 ஆகும்.