திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 75 நாட்களாக மாமன்ற கூட்டம் நடைபெறாததைக் கண்டித்து, 14வது வார்டு பாஜக உறுப்பினர் தனபால் மாநகராட்சி முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். மக்களின் பிரச்சனைகள் மற்றும் வார்டு குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் மாமன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும். 01.09.2025 அன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு கூட்டம் நடத்தப்படாததால், உடனடியாக கூட்டம் நடத்த தேதி அறிவிக்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு அளித்தும் தீர்வு கிடைக்காததால் இந்த போராட்டம் நடைபெற்றது.