தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 (SIR) நடைபெற்று வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ டி ஐ மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் என 200க்கு மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மணிக்கூண்டு வரை சென்று மீண்டும் அலுவலகம் திரும்பியது. வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விளம்பர பலகைகளை ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.