திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹிஜ்ரி 1447 துல்கஃதா மாதம் 29ஆம் நாளான 17-05-2026 அன்று துல்ஹஜ் பிறை காணப்படவில்லை. இதனால், 19-05-2026 செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறையாக ஷரீஅத் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 27-05-2026 புதன்கிழமை அரஃபா நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும், 28-05-2026 வியாழக்கிழமை ஈதுல் அழ்ஹா பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.