முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா

1பார்த்தது
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி 44வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன், மேட்டுப்பட்டியில் கழகக் கொடியேற்றி, கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் செந்தில்குமார், மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிஹரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி