கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு - கொலையா?

0பார்த்தது
கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு - கொலையா?
திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள கண்ணபிரான் என்பவரின் தோட்டத்தில் கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தவர் செட்டிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த கணேசனின் மனைவி சந்திரா (58) என்பது தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி