திண்டுக்கல், பழனி பைபாஸ் அருகே S. K. P. பஸ் சர்வீஸிற்கு சொந்தமான பேருந்தின் பிரேக் கோளாறை சரி பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் குமரேசன், திடீரென பேருந்து நகர்ந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாடிக்கொம்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.