கார் குண்டு வெடிப்பு சம்பவம் ரயில்வே நிலையத்தில் சோதனை

0பார்த்தது
டெல்லி செங்கோட்டை அருகே இன்று இரவு காரிலிருந்து குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் இணைந்து ரயில் நிலையத்திலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி