திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உடன் இருந்தார். இந்த முகாம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.