திண்டுக்கல் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் மாசி திருவிழாவின் இறுதி நாளான இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் செல்லாண்டியம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆசி பெற்றனர்.