மார்ச் 1 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் திமுக சார்பில் விழா கொண்டாடப்பட்டது. வார்டு செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவைத்தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் கண்ணன், வார்டு நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.