திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. லயன்ஸ் கிளப் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தாய் கூடு பவுண்டேஷன் நிறுவனர் குணவதி மற்றும் ஹிரன்யா பைனான்ஸ் உரிமையாளர் நிஷா பாலு ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கினர். பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு வேடமணிந்து போட்டிகளிலும் பங்கேற்றனர். லயன்ஸ் சங்க செயலாளர் தனராஜ், பொருளாளர் சையது சூரஜ், புரவலர் திபூர்சியஸ் மற்றும் வட்டார தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.