திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சேர்ந்த 25 பழங்குடியின இளைஞர்களுடன் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் 'Coffee with Collector' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கான ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். பழங்குடியினர் நலன் தொடர்பாக அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து ஆட்சியர் விளக்கினார்.