திண்டுக்கல்லில் உள்ள எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து, ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு பதாகை ஏந்திப் போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம், இன்றிலிருந்து காலவரையற்ற போராட்டமாக நடத்தப்படும் என கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.