கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கே. பாலபாரதி தலைமையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி தலைமை தபால் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.