திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இ. பி காலனியைச் சேர்ந்த ஆனந்தி, ஒரு தொண்டு நிறுவனத்தில் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 30 மேலாளர்களை நியமித்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்ததாகக் கூறியுள்ளார். நிறுவனம் ஏழு கோடி ரூபாய் வரை பண மோசடி செய்துவிட்டு கேட்டதற்கு தரவில்லை என்றும், இது குறித்து வழக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிலருக்கு பணம் செலுத்தப்பட்டாலும், தற்போது சிலர் உண்மைக்கு புறம்பான விஷயங்களைக் கூறி வீட்டை முற்றுகையிட்டுள்ளதாகவும், இது முற்றிலும் தவறானது என்றும் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.