இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான பூப்பந்தாட்டப் போட்டிகள் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடைபெற்றன. இதில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஐந்து போட்டிகளிலும் இந்தோனேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கங்களை வென்றன. வெற்றி பெற்ற இந்திய ஆடவர் அணியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணக்கண்ணன் இடம்பெற்றிருந்தார். தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் டாக்டர் சீனி வாசன், தங்கப் பதக்கம் வென்ற சரவணக்கண்ணனை நேரில் அழைத்து வாழ்த்தினார்.