திண்டுக்கல் சீனிவாசன் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம்

631பார்த்தது
திண்டுக்கல் சீனிவாசன் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் SIR (special intensive Revision) தீவிர சுருக்க திருத்தம், நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய வாக்காளர் சேர்ப்பு பணிகள், மற்றும் சட்ட மன்ற தொகுதி வாரியாக அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில், அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் VPB. பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி