ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடிவீரர் உயிரிழப்பு

1பார்த்தது
ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடிவீரர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டி புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அலங்காநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த 750 காளைகளும், 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அழகர்கோவிலைச் சேர்ந்த நீதி என்ற மாடுபிடி வீரர், காளை குத்தியதில் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் திருவிழாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி