திண்டுக்கல் ஜி.எஸ். மைதானத்தில்
கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில், சங்கையா என்ற வாலிபர் கத்தியால் கீறப்பட்டும், கட்டையால் தாக்கப்பட்டும் காயமடைந்துள்ளார். குடைபாறைபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார், பிரேம்குமார், சிவா ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.