திண்டுக்கல்லில் 2022ல் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீரங்க பாண்டியன் (23) என்பவர் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பிணையில் வெளிவந்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீஸார் அவரைப் பிடித்தனர்.