டி. என். டி ஒற்றை சான்றிதழ் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்

11பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், சீர்மரபினர் மக்கள் டி.என்.டி. இரட்டை சான்றிதழை ஒற்றைச் சான்றிதழாக வழங்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசாணை வழங்கப்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.