திண்டுக்கல்: 10 டிராக்டர்களில் 1,008 தட்டுகள் சீர்

56பார்த்தது
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி காது குத்து விழாவில் தாய்மார்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். தாய் மாமர்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளின் மகன், மகள் காது குத்து விழாவில் சிறப்பாக சீர் வரிசை செய்வது என்பது பாரம்பரிய முறையாகும். அதன்படி திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சந்தோஷ். இவரது மகன் யுவன் ஸ்ரீஹரி, இவரது காது குத்து விழா திண்டுக்கல் பிவிகே மஹாலில் நடைபெற்றது. 

முன்னதாக 10 மாட்டு வண்டிகள், 10 டிராக்டர்களில் ஒரு வருடத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், அரிசி மூட்டைகள், இனிப்பு வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் பலாப்பழம் என பல வகையான பழ வகைகள், புத்தாடைகள், பணம், தங்க நகைகள் போன்றவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டங்கள் நடைபெற்றது, 

மேலும் ஊர்வலத்தில் பொன் முத்துராமலிங்க தேவர், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வடிவேலு ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஆட்டுக்கிடா கொண்டு வரப்பட்டது. தப்பாட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. ஊர்வலம் பின்னே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சார்ட் வண்டியில் மருமகன் யுவன்ஸ்ரீஹரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி