திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீ அகஸ்திய விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ எல்லம்மாள் தொட்டிச்சி அம்மன் சன்னதி உள்ளது. இந்நிலையில் பங்குனி முதல் தேதியை முன்னிட்டு, இன்று அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.