திண்டுக்கல்: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் கைது

53பார்த்தது
திண்டுக்கல்: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் கைது
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் நிலைய எல்லைக்குள் உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குமரன் திருநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கிழக்கு YMR-பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரன் மகன் விக்னேஸ்வரன்(29), குமரன் திருநகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் தனசேகர்(29) ஆகிய இருவரும் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்த போது அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.