திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 2024-ம் ஆண்டு குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. இனிகோதிவ்யன் மேற்பார்வையில் டிஎஸ்பி. இளந்திரையன் தலைமையில் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சுகுணா, சார்புஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசி கடத்தியதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 290 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 82,539 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 28 வாகனங்கள் பறிமுதல் செய்ததாக குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.