திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (38). இவரது கணவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். கணவரை பாா்ப்பதற்காக சென்னை சென்ற உமாமகேஸ்வரி, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டாா். உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரயில் திண்டுக்கல்லுக்கு வந்த போது, தனது உடைமைகளுடன் உமாமகேஸ்வரி இறங்கினாா். வீட்டுக்குச் சென்று அவா் பாா்த்த போது 4 பவுன் சங்கிலி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.