திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
அகவிலைப்படி, மருத்துவப் படி, இலவச மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்குத் தொகை, குடும்ப நலநிதி, குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்ட நலப்பயன்களை வழங்க வேண்டும் எனக் கோரிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் சுந்தரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.