திண்டுக்கல்: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக பேகம்பூர் மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஒட்டகம் ஒன்று சவாரி செய்வதற்காக வலம் வருகிறது. ஒட்டகத்தின் உரிமையாளரிடம் விசாரித்த பொழுது ஒட்டகத்தில் சவாரி வருவதற்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் என்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் என்று சொன்னார். இந்த ஒட்டகம் முக்கிய வீதிகளில் வலம் வரும் போது வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.