திண்டுக்கல்: வரி வசூல் இலக்கை எட்டியது மாநகராட்சி

70பார்த்தது
திண்டுக்கல்: வரி வசூல் இலக்கை எட்டியது மாநகராட்சி
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களுக்கும் சொத்து வரி வசூலிக்கும் பணி திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. சொத்து வரியை மட்டும் நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதிக்குழு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2022-23-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியை விட, 2023-24-ஆம் ஆண்டில் 115 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டியதால், ரூ. 10 கோடி ஊக்கத் தொகை கிடைத்தது. 

இதேபோல், நிகழ் நிதியாண்டில் கடந்த ஆண்டை விட 111.5 சதவீத கூடுதல் தொகை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வகையில் ரூ. 26. 5726.57 கோடி இலக்கை நோக்கி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால், இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 24-ஆம் தேதி மாலை இலக்கை எட்டுவதற்கு ரூ. 16. 9016.90 லட்சம் தேவையாக இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 17 லட்சத்தை கடந்து வரி வசூல் நடைபெற்றது. இதன் மூலம் ரூ. 26. 5726.57 கோடி இலக்கை நிறைவு செய்த மாநகராட்சி அலுவலர்கள், மத்திய நிதிக் குழுவின் மானியம் ரூ. 10 கோடி கிடைப்பதையும் உறுதி செய்தனர்.

தொடர்புடைய செய்தி