நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் எடுத்து புத்தாடைகளை உடுத்தி பாரம்பரிய முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகர் பஜார் பகுதியில் கடந்த இரு தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்காலிக சாலையோர கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட தரைக்கடைகளினால் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் குப்பை குவியலாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை இல்லாத காரணத்தினால் இரவு முழுவதும் திண்டுக்கல் பஜாரில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தற்பொழுது வரை பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தேவையான புத்தாடைகளை சாலையோர கடைகளில் வாங்கி செல்வதை காண முடிந்தது.