திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோக்கைக்கான கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) முதல் நடைபெறுகிறது. அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்புப் பிரிவுக்கான (முன்னாள் படை வீரர், தேசிய மாணவர் படை, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்புப் படையில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கலந்தாய்வு நடைபெறுகிறது.